தெஹிவளை மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவ தலைவா்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நேற்றைய தினம் (27) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. 

65 பேர் பங்குபற்றிய குறித்த பயிற்சி நிகழ்வில் பாணந்துரை வைத்தியசாலையின் வைத்தியா் டொக்டா் மக்காங் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் சில்மி ஆகியோரினால் தலைமைத்துவப் பயிற்சி அளிக்கப்பட்டது.

 கடந்த நூற்றாண்டு காலமாக கொள்ளுப்பிட்டியில் இருந்து மொரட்டுவை வரை முஸ்லிம்களுக்கு ஒர் ஆண் பாடசாலை இல்லாத குறையை தெஹிவளை பாலத்திற்கு அருகில் மூர் வீதியில் உள்ள மீலாத் முஸ்லிம் மகா வித்தியாலயம் ஈடு செய்கின்றது. 

கடந்த காலங்களில் பலா் இப்பாடசாலையை இல்லாமல் செய்து அக்காணியை அபகரிக்க முயற்சித்தாா்கள்.

இருந்தும் விடா முயற்சியினால் பாடசாலை ஆசிரியா் அதிபா் அபிவிருத்திச் சங்கங்கள், தெஹிவளை - கல்கிசை மாநகர சபையில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்கள், ஜம்மியத்துல் உலமா பாடுபட்டு இக் கட்டிடத்தினை நன்கொடையாளா் ஊடாக இப் பாடசாலை புதிதாக மீளக் கட்டியெழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடசாலையை 20 பேர்சஸில் 4மாடிகளை கடந்த 2 வருடங்களுக்கு முன் மெலிபன் கம்பனி தலைவா் இல்யாஸ் ஹாஜி அமைத்துக் கொடுத்ததன் பயனாக தற்போதைய அதிபா் சுஹூட் அவா்களின் தலைமையில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது. 

 3வருடத்திற்கு முன் 70 மாணவா்களுடன் இருந்த இப் பாடசாலை தற்பொழுது 450 மாணவா்கள் இரு மொழிக் கல்வி (ஆங்கிலம், தமிழ்) மற்றும் உயா் தரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஷ்ரப் ஏ சமத்)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.