அனோஜிதா சிவாஸ்கரன் அவர்கள் 2022 ஐக்கிய இராச்சியத்தின் மன்செஸ்ரர் இல் இடம்பெறவுள்ள  “One Young world” உலக மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

உலகளாவிய ரீதியில் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2000 இற்கும் அதிகமான இளைய தலைவர்களை ஐக்கிய
இராச்சியத்தில் பாரியளவில் ஒன்றுசேர்க்கின்ற அமைப்பு இதுவாகும்.


இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அனோஜிதா சிவகரன் அவர்கள் - 2022 செப்ரெம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் மன்செஸ்ரரில் இடம்பெறவுள்ள  “One Young world” உலக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய ஆணையகத்தின் அமைதிக்கான தூதுவராக புலமைப் பரிசிலைப் பெற்றுக்கொண்ட ஒரேயயொரு இலங்கையராவார். ஒவ்வொரு
ஆண்டும் அமைதியைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களின் பங்களிப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக அமைதிக்கான
தூதுவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.

ஐரோப்பிய ஆணையகத்தின் (EUROPEAN COMMISSION) அனுசரணையுடன் “One Young world” அமைதிக்கான
தூதுக்குழுவின் உறுப்பினராக அனோஜிதா சிவாஸ்கரன் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார். மாநாட்டில் ஒரு பகுதியாக ரூபவ் அவர்கள் வன்முறையான தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் அவர்கள் தமது சமூகங்களில் சமாதானத்தை கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களைக் கலந்துரையாடுவதுடன் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் வன்முறையான தீவிரவாதத்திற்கு எதிராக
செயற்படுவதற்கு நடைமுறைச் சாத்தியமான கண்ணோட்டங்களைப்
பகிர்ந்து கொள்வர்.

“One Young world”  அமைதிக்கான தூதுவர் நிகழ்ச்சித்திட்டம் உலகளாவிய ரீதியில் இளைய தலைவர்களுக்கு வன்முறையான தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் எதிராகச் செயலாற்றுவதற்கும், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் முரண்பாடுகளுக்கு தீர்வுகாண்பதற்கு ஊக்குவிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குகின்றது. மேலும் தத்தமது சமூகங்களில் அமைதிக்காகப்
போராடுகின்ற இளைஞர்கள்; யுவதிகள் தொடர்ச்சியான சிறந்த வருவிளைவுகளை அடைவதற்காக ஒத்துழைப்புக்களையும்
பிணைப்புக்களையும் வலுவூட்டுகின்றது.

வருடாந்தம் “One Young world”  சகல நாடுகளிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த 2000 இற்கும் மேற்பட்ட திறமைமிக்க இளைஞர் யுவதிகளை பௌதீக ரீதியாகவும் மற்றும் இணையவழியாகவும் சமூக மாற்றங்களை விரைவுபடுத்தும் நோக்கில் ஒன்றிணைக்கின்றது.

இதுவரையில் 190 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகளுக்கு பான் கீ-மூன் போல் பொல்மன் மற்றும் மேகான் மார்க்கல் போன்ற பிரபல அரசியல் வணிக மற்றும் மனிதநேயத் தலைவர்கள் உள்ளிட்ட பலரால் சமூகத்தில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ‘மாற்றத்திற்கான முகவர்களாக’ செயலாற்றுவதற்குத் தேவையான அறிவு மற்றும் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர் பிரதிநிதிகள் உரைகள் கலந்துரையாடல்கள் வலையமைப்பாக இயங்குதல் மற்றும் செயலமர்வுகள் போன்ற மாற்றத்திற்கான பயிற்சிகளில் நான்கு நாட்கள் பங்குபற்றுவர். அத்துடன் பங்குபற்றுநர்கள் உலக ஊடகங்கள் மற்றும் உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரதம உரையாற்றுவதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் வாய்ப்புக்களும் உண்டு.

பங்குபற்றுகின்ற பிரதிநிதிகளுக்கு உலகத் தலைவர்களுக்கு சவால் விடுப்பதற்கும்ரூபவ் உலகத்தில் செல்வாக்குச் செலுத்துகின்ற விசேட நிபுணர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தொடர்ச்சியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

மாநாடு செப்ரெம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதி வரை இங்கிலாந்தின் மன்செஸ்ரர் மத்திய மாநாட்டு மண்டபத்தில் நடைபெறுவதுடன் ஆரம்ப நிகழ்வு மன்செஸ்ரர் பிரித்தானிய ஒலிபரப்பு நிலைய அரங்கின்
ப்ரிட்ஜ்வார்ட்டர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அனோஜிதா சிவாஸ்கரன் அவர்கள் இவ்வாறு கூறுகின்றார் : “இளைய அமைதித் தூதுவராகரூபவ் எனது சமூகம்
எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ‘அமைதிக்கான தூதுவராக’ இளைஞர் பரம்பரையை வலுவூட்டுவதே தனது குறிக்கோள். எனது குறிக்கோளை நடைமுறையில் வெற்றியடைச் செய்வதற்கு செயலாற்றுவதுடன் அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தைத் தடுத்தல் மற்றும் அதற்கு எதிராகச் செயலாற்றுதல் போன்ற துறைகளில் ஒத்திசைவான எண்ணங்களைக் கொண்டுள்ள இளைஞர் யுவதிகளுடன் இணைந்து மாற்றங்களுக்கு அழுத்தங்
கொடுக்கக்கூடிய “ழுநெ லுழரபெ றுழசடன” போன்ற தளங்களில் செயற்படுவேன். குறிப்பாகரூபவ் உலகளாவிய ரீதியில்
காணப்படுகின்ற பிரச்சினைகள் மற்றும் மோதல்களுக்கு நிலைபேறான தீர்வுகளைக் கண்டறியவும் அமைதியைக்
கட்டியெழுப்பவும்; இளைஞர் யுவதிளுக்கு உரிய தளங்களை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய ஆணையகத்தின்
அமைதிக்கான தூதுவர் நிகழ்ச்சித்திட்டத்தில் இணைந்து கொள்வதற்கு ஆர்வமாக உள்ளேன்.”
எல்ல றொபேரட்சன் மெகே (Ella Robertson McKay) “One Young world” முகாமைத்துவப் பணிப்பாளர்
இவ்வாறு கூறுகின்றார் : “இவ்வருடம் ஐரோப்பிய ஆணையகத்தின் அமைதிக்கான தூதுவர்களை மன்செஸ்ரர் நகருக்கு அழைப்பதில் அகமகிழ்வடைகின்றோம். எமது மாநாட்டுக்கு சகல தூதுவர்களையும் அன்புடன் வரவேற்றுக் கொள்வதுடன் உலகளாவிய சமூகத்திற்கு வழிகளைத் திறத்தல் புதிய வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துதல் போன்ற நோக்கங்களைக் கொண்டுள்ளது. இவ்வருடம் எமது மாநாட்டின் ஒப்பற்ற வலையமைப்பானது பங்குபற்றுநர்களுக்கு அவர்களின் பெறுமதிமிக்க முயற்சிகளுக்கான அறிவையும் திறன்களையும் வழங்குகின்றது.”

1.“One Young world” பற்றிய வரலாறு
“One Young world” என்பது
“One Young world”  என்பதுரூபவ் உலகளாவிய சமூகம்ரூபவ் இளம் தலைவர்களுக்காகரூபவ் உலகின் பாரிய சவால்களுக்குத்
தீர்வுகாண்பதற்காக நடவடிக்கை மேற்கொள்கின்ற இளைய தலைவர்களை உருவாக்குவதன் மூலம் அனைவருக்கும் நியாயமான
நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது இளைய தலைவர்களின் நிபுணத்துவத்தை கட்டியெழுப்புவதுடன்
அவர்களின் சுயபிம்பத்தையும் அதிகரிக்கின்றதுடன் அவர்களுடைய சிறந்த விளைவுகளை அதிகரிப்பதற்கும்
ஊக்கமளிக்கின்றது.


“One Young world”  என்பது உலகளாவிய ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற ஒப்பற்ற தளமாக அமைகின்றது.
13,500 இற்கும் மேற்பட்ட தூதுவர்களின் வலையமைப்புடன் “One Young world” சமூகத்தின் தலைமையிலான புத்தாக்க
முயற்சிகளை உலகளாவிய ரீதியில் 35.8 மில்லியன் மக்களுடன் நேரடியாக சிறந்த விளைவுகளை ஏற்படுத்துவதில்
பங்களிப்புச் செய்துள்ளது. ஒவ்வொரு டொலர் முதலீட்டில்ரூபவ் ஒரு இளைமை உலக ழுநெ லுழரபெ றுழசடன தூதுவர்கள் 16 டொல்களுக்கான சமமான சமூக மதிப்பீட்டை வழங்குகின்றார்கள்.

2021 ஆம் ஆண்டில் மாத்திரம்ரூபவ் அமைதிக்கான தூதுவர்களின் கருத்திட்டங்களால் 812,000 தொன்கள் காபனீரொட்சைட்
வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளதுடன்ரூபவ் வறுமையால் வாடுகின்ற 273,229 பேருக்கு ஒத்துழைப்புக்களையும் வழங்கியுள்ளது. மேலும் 558 டொலர் மில்லியன்களுக்கு சமமான சமூக மதிப்பீட்டை உருவாக்கியுள்ளது.

அதன் வருடாந்த மாநாடு உலகம் முழுவதும் சமூகத்தில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்துவதற்காக பாடுபடுகின்ற ஒவ்வொரு நாடு
மற்றும் துறைகளிலும் திறமைவாய்ந்த இளைய தவைர்களை ஒன்று திரட்டுகின்றது. 190 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த
பிரதிநிதிகள் தலைவர் மேரி ராபின்சன் கலாநிதி ஜேன் குடால் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முஹம்மது யூனுஸ் மற்றும் டச்சஸ் ஒஃப் சசெக்ஸ் போன்ற செல்வாக்கு மிக்க அரசியல் வணிக மற்றும் மனிதாபிமான
தலைவர்கள் ஆலோசனை வழங்குகின்றார்கள்.

அஸ்ட்ராசெனிகா (AstraZeneca), அவ்டி (Audi), பிஎம்டபிள்யு (BMW), கிரெடிட் சூயிஸ், சிட்டிகுரூப், கிளிஃபோர்ட் சான்ஸ், கொகா கோலா, டெலொய்ட், டியோர், ஜெனரல் எலெக்ட்ரிக், ஹோல்சிம், ஜோன்சன் அன்ட் ஜோன்சன், கேபிஎம்ஜி, எல்ரூசூ, நோவார்டிஸ், ஃபைசர், ரெக்கிட், சீமென்ஸ், ஸ்வரோவ்ஸ்கி,
யூனிலீவர், வெரிசோன் போன்ற பங்காளர்கள் கைகோர்த்துள்ளனர்.

இதுவரைக்கும் உலகளாவிய ரீதயில் லண்டன் (2010), சூரிச் (2011), பிட்ஸ்பேர்க் (2012) ஜோகன்னஸ்பேர்க், (2013), டப்ளின் (2014), பாங்கொக் (2015), ஒட்டாவா (2016), பொகோட்டா (2017), த ஹேக்ரூபவ் லண்டன் (2019) மற்றும் முனிச் (2021) ஆகிய நகரங்களில் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. அடுத்த உலக மாநாடு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் திகதி தொடக்கம் 8 ஆம் திகதிவரை ஐக்கிய இராச்சியத்தின் மான்செஸ்டரில் நடைபெறும்.


“One Young world”  மாநாட்டுக்கு மேலதிகமாக பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் இளைய தலைவர் தலைவியர்களுக்கு நிதியுதவி வழங்கும் வகையில் ஒரு ஆண்டுகால நிகழ்ச்சித்திட்டத்தையும் இவ் அமைப்பு மேற்கொள்கின்றது.

செல்வாக்குமிக்க ஆலோசகர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் மேற்கோள்கள் பின்வருமாறு:



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.