பிரித்தானியாவின் புதிய அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு உயர் பதவி

  Fayasa Fasil
By -
0




பிரித்தானியாவின் புதிய பிரதமர் லீஸ் ட்ரஸின் அமைச்சரவையில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரணில் ஜெயவர்தன புதிய சுற்றுச்சூழல் செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் சுற்றாடல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான திணைக்களத்தை வழிநடத்தும் அதேவேளையில், உணவு மற்றும் விவசாயக் கொள்கைகளுக்குப் பொறுப்பாகவும் இவர் இருப்பார்.

முன்னதாக சர்வதேச வர்த்தகத் துறையில் கனிஸ்ட அமைச்சராக இருந்த ரணில் ஜெயவர்தன, புதிய பிரதம மந்திரி டிரஸின் ஆரம்பகால ஆதரவாளராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)