இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை 06 விக்கெட்களினால் வெற்றி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராட்சியம், துபாய் சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும் மத்திய வரிசையில் ஓட்டங்களை அதிரடியாக பெற முடியாமல் போனது, இருந்தாலும் இறுதி நேரத்தில் அதிரடியாக அடிதடி வெற்றியினை பெற்றுக் கொண்டது .

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய இந்தியா அணி, அதிரடியான ஆரம்பம் ஒன்ப் பெற்றதனால் சிறந்த ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்றுக் கொண்டது. லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா இருவருமே வேகமாக ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர். இருப்பினும் மூன்று விக்கெட்கள் தொடர்ச்சியான இடைவேளைகளில் வேகமாக வீழ்த்தப்பட்டமையினால் ஓட்ட எண்னிக்கை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்தாலும் நுட்பமாக விளையாடிய விராத் கோலி தொடர்ச்சியாக ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். சராசரி இணைப்பாட்டங்களை அனைவருடனும் பகிர்ந்து இந்த தொடரின் இரண்டாவது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். விளையாடிய மூன்று போட்டிகளிலும் 30 ஓட்டங்களை அவர் கடந்துள்ளார்.

150 ஓட்டங்களுக்கு மேலான ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடிப்பது கடினம் என்ற நிலையில் 182 ஓட்டங்களை துரதியடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புள்ள மைதானத்தில் சுழற் பந்துவீச்சாளர்கள் ஷதாப் கான், முகமட் நவாஸ் ஆகியோர் மூன்று விக்கெட்களை பகிர்ந்து கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வளவு சிறப்பாக பந்துவீசவில்லை.

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, ஆரம்பத்திலேயே அணி தலைவர் பாபர் அஸாமின் விக்கெட்டினை இழந்தது. ஆனால், முகமட் ரிஷ்வான் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். அவரோடு மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த முஹமட் நவாஸும் ஓட்டங்களை வேகமாக பெற்றுக் கொடுத்தார். இறுதி நேரத்தில் குஷ்தில் ஷா, ஆசிட் அலி ஆகியோர் அதிரடியாக அடித்தாடி இறுதி ஓவரில் வெற்றியினை பெற்றனர்.

தொடர்ந்தும் இறுக்கமாக பந்துவீசிய இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் ஓட்ட எண்ணிக்கையினை கட்டுப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இன்னுமொரு போட்டியில் வெற்றி பெற்றுக் கொண்டால் இறுதிப் போட்டி வாய்ப்பை பெறும் நிலை ஏற்படும். பாகிஸ்தான் அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே வெற்றியினை பெற முடியுமென்ற நிலை ஏற்படும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.