பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் போட்டியில் ஆப்கானிஸ்தானின் அணியை ஒரு விக்கெட்டினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தனக்கான வாய்ப்பை இழந்துள்ள அதேவேளை, இந்தியா அணிக்கான வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளன.

ஓட்டங்கள் குவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போட்டியில், குறைந்த ஓட்டங்களே பெறப்பட்டன. 130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி, 4 பந்துகள் மீதமாகவிருக்க இறுதி விக்கெட் கையிலிருக்க 10 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரர் இரண்டு பந்துகளில் 2 ஆறு ஓட்டங்களை அடித்து பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இறுதி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணிக்கான வாய்ப்புகள் இருக்கின்றன எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 10 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரரான 19 வயது வீரர் நஷீம் ஷா இறுதி ஓவரின் முதல் இரு பந்துகளையும் ஆறு ஓட்டங்களாக அடித்து வெற்றியினைப் பெற்றுக் கொடுத்தார்.

இன்றைய தினம் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியும், நாளை பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியும் காத்திருக்கின்றன.

ஆசிய கிண்ணப் போட்டிகள் அதிக விறு விறுப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. இந்தப் போட்டி மேலும் விறு விறுப்பை ஏறபடுத்தியது. தனியே விளையாடிய அணிகள் மட்டுமன்றி இந்தியா, இலங்கை அணிகளது வாய்ப்புகளும் இந்தப் போட்டியின் முடிவில் தங்கியிருந்தன.

ஆசிய கிண்ண தொடரின் இரண்டாம் சுற்றுப் போட்டிகளின் மீதமுள்ள இரண்டு போட்டிகளும் விறு விறுப்பை இல்லாமல் செய்துள்ளன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.