மத்திய வங்கியின் ஆளுநரை நீக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு இல்லை...

- ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரை அப்பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் ஆளும் கட்சிக்கு எந்தவித எதிர்பார்ப்போ தேவையோ இல்லையெனவும்  எனவும் எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறான தேவை இருக்கிறதா  என்று தாம் அறியவில்லை என்றும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான திரு.பிரசன்ன ரணதுங்க இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  ரோஹினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  அமைச்சருக்கும், பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள்  நடைபெற்றது.

மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன (ஐ.ம.ச)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு அமைச்சர் சம்பளம், ஓய்வூதியம், மத்திய வங்கி ஆளுநரின் ஓய்வூதியம் வழங்கப்பட்டவுடன், மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரை தூக்கி எறிய முயற்சிக்கிறார்கள்.

ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க

தற்போதைய மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆளும் கட்சிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. அவரை முன்னாள் ஜனாதிபதியே நியமித்தார். தற்போதைய ஜனாதிபதி அவரது பதவிக் காலத்தை நீடித்துள்ளார். மத்திய வங்கி ஆளுநரை பதவி நீக்கம் செய்ய ஆளும் கட்சி முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் காட்ட முயல்கின்றன. எதிர்க்கட்சிகளுக்கு அவ்வாறான ஒரு தேவை  இருக்கிறதா என்று தெரியவில்லை.

முனீரா அபூபக்கர்

2022.09.06

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.