மேற்குலக நாடுகளிடமிருந்து அணுவாயுத அச்சுறுத்தல்; ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு – முழு நாடும் தயார் நிலையில்!

  Fayasa Fasil
By -
0




மேற்குலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான அணுவாயுத அச்சுறுத்தலை விடுப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமர் புட்டின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உக்ரைனுக்கு எதிரான இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பான ரஷ்யாவின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வௌியிடுகையில் அவர் இதனை தெரிவித்தார்.


மேற்குலக நாடுகளின் அச்சுறுத்தலுக்கு பதிலளிக்க ரஷ்யாவிடம் அதிகளவான ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இராணுவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, நாட்டின் ஆட்சியாளர் ஒருவர் இதுபோன்ற உத்தரவை வழங்குவது இதுவே முதல் முறையாகும் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)