அசர்பைஜான் எல்லைப் பாதுகாப்பு படையினர் நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். அசர்பைஜானின் Beylagan மாவட்டத்தில் Birinji Shahsevan என்ற கிராமத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானுடனான அசர்பைஜான் எல்லையை கடக்க முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் Horadiz எல்லையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இலங்கையர்கள் டேஹா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து அசர்பைஜானின் Baku நகருக்கு வந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த இலங்கையர்கள் ஈரான் வழியாக துருக்கி சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றுக்கு  செயல்ல முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்வின்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.