இலங்கையிலுள்ள சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு உறுப்பு செயலிழப்பைத் தடுக்க உதவும் உயிர்காக்கும் மருந்துகளை பாகிஸ்தான் நன்கொடையாக வழங்கியது.

அதற்கமைய இந்த நன்கொடை இலங்கையின் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினூடாக இலங்கை சுகாதார அமைச்சகத்திடம் “CCL Pharmaceuticals Pakistan” என்ற நிறுவனம் வழங்கியது.

இந்த நன்கொடையானது, இலங்கையின் தற்போதைய கடுமையான மருந்துப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு சிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான முக்கியமான மருந்துகளை வழங்குவதன் மூலம்  இலங்கை அரசாங்கத்திற்கு  பாரிய உதவியாக இருக்கும்.

இந்த உதவியானது, அனைவருக்கும் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைச் செயல்படுத்துவதற்கான CCLs ‘ஹேண்ட் இன் ஹேண்ட்’ ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 2030 இன் கீழ் செயற்படுகின்றது.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் மருந்து கையளிக்கப்பட்ட இந்நிகழ்வில் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உமர் ஃபாரூக் பர்கி, CCL இன் வணிகத் தலைவர் சையத் உமைர் மரூஃப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் ஃபாரூக் பர்கி கருத்துத் தெரிவிக்கையில்,

“பாகிஸ்தானின் அரசாங்கமும் தனியார் துறையும் எமது இலங்கை சகோதர சகோதரிகளுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யும். 

குறிப்பாக இந்த  சவாலான நேரங்களில் இலங்கை மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதற்கு எங்களின் அழைப்புக்கு சாதகமாக பதிலளித்த CCL Pharmaceuticals ஐ நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்" என்றார்.

இங்கு கருத்து வெளியிட்ட சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

“கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் CCL Pharmaceuticals பாகிஸ்தானின் இத்தகைய முக்கியமான மருந்தை எமது மக்களுக்கு வழங்குவதற்கான ஆதரவை சுகாதார அமைச்சு அன்புடன் வரவேற்கிறது.

சிறுநீரகம் செயலிழந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இது பெரிதும் உதவும். தற்போதைய பொருளாதார நிலைமையின் CCL இன் இந்த ஆதரவு இலங்கை மக்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவையை வழங்குவதற்கு எங்களிடம் தரம் வாய்ந்த மருந்து உள்ளது என்பதை உறுதியளிக்கிறது" என்றார்.

15- 20% வரை உள்ள 400 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு Tacgraf மிகவும் முக்கியமான ஒரு நோய்த்தடுப்பு மருந்து என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.

விடியல் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.