எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி வரை விசேட சொகுசு சுற்றுலா புகையிரதத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு வார இறுதியிலும் இயக்கப்படவுள்ள புதிய சுற்றுலா ரயில், கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 9.18 மணிக்கு கண்டியை சென்றடையும்.

மீண்டும் மாலை 4.50 மணிக்கு கண்டியில் இருந்து புறப்படும் ரயில் இரவு 7.40 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

தலதா மாளிகை மற்றும் பேராதனை தாவரவியற் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு இந்த விசேட ரயில் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு டிக்கெட்டின் விலை 2,000 ரூபாய் மற்றும் 2 ஆம் வகுப்பு டிக்கெட்டின் விலை 1,500 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கோட்டையில் இருந்து அனுராதபுரத்துக்கு விசேட சொகுசு சுற்றுலா ரயிலும் விரைவில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.