(எம்.என்.எம்.அப்ராஸ்)

புளுநேவீஸ் சவால் கிண்ண இறுதி போட்டிக்கு
சாய்ந்தமருது பிளைங்கோர்ஸ் விளையாட்டு கழகத்தினை வெற்றி கொண்டு கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் தெரிவானது.

கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில்நேற்று(12) நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பிளைங்கோர்ஸ் விளையாட்டு கழகம் நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 117 ஓட்டத்தினை பெற்றது. 

பதிலளித்தாடிய லெஜன்ஸ் விளையாட்டு கழகம் 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்து புளுநேவீஸ் சவால் கிண்ண இறுதி போட்டிக்கு தெரிவானது.

குறித்த போட்டிக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் பிரதி தலைவரும், கல்முனை  ஹோலி பில்ட் கழகத்தின்பொதுச் செயலாளரும்,கல்விமானும்,பிரபல சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் கலாநிதி 
எஸ்.எல் ரியாஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இதன் போது போட்டியின் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட சப்ராஸ் தெரிவானார் இவருக்கான ஆட்ட நாயகன் விருது பிரதம அதிதி கலாநிதி எஸ்.எல் ரியாஸ் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.