அர்ஜெண்டினாவில் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. ஒருவித நிமோனியா காய்ச்சலான அந்த நோயால் இவ்வாரம் மூவர் உயிரிழந்தனர். 

நோய்க்குப் பலியானவர்கள் ஒரு குறிப்பிட்ட தனியார் மருந்தகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

துக்குமன் மாநிலத்தில் இதுவரை 9 பேருக்கு அந்த நோய் தொற்றியுள்ளது. அவர்களில் 8 பேர் பாதிக்கப்பட்ட தனியார் மருந்தகத்தில் மருத்துவ ஊழியர்களாகப் பணிபுரிபவர்கள். உயிரிழந்த மூவரில் இருவர் மருத்துவ ஊழியர்கள்.

சம்பவம் குறித்து அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நோய் கொவிட் நோய், சளிக்காய்ச்சல், லிஜனெல்லா நுண்ணுயிர் நோய், எலி வகை விலங்குகளால் பரவும் ஹண்ட்டா வைரஸ் ஆகியவை இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதன் மாதிரிகள் போனஸ் அயர்ஸிலுள்ள மெல்பிரான் கல்வி நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மிக அண்மையில் மர்ம நோய்த் தொற்று ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டவர், தனியார் மருந்தகத்தில் அறுவை சிகிச்சை பெறச் சேர்க்கப்பட்ட 70 வயதுப் பெண்ணாவார்.

அவருக்குத்தான் முதன்முதலில் மர்ம நோய் தொற்றியிருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அது குறித்துக் கூடுதல் விசாரணை இடம்பெறுகிறது. 

நோய்த் தொற்று ஏற்பட்ட முதல் 6 நோயாளிகளிடம் ஓகஸ்ட் 18 க்கும் 23 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாந்தி, கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.