கம்பஹா மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு இடையிலான தமிழ் மொழி தின போட்டிகள் நாளை (02) மினுவாங்கொடை, கல்லொழுவ அல் அமான் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மாவட்டத்திலுள்ள கம்பஹா, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, களனி ஆகிய கல்வி வலயங்களை சேர்ந்த பாடசாலைகள் இதில் பங்குபற்றவுள்ளன.
ஆரம்ப நிகழ்வில் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
சிறப்பு அதிதியாக மூத்த ஊடகவியாளர் எம்.ஏ.எம்.நிலாம் கலந்து கொள்ளவுள்ளதாக மினுவாங்கொட கல்வி வலய தமிழ் பிரிவு பணிப்பாளர் ரிஸ்வி அமீர் தெரிவித்தார்.