வடக்கு ஆப்கானிஸ்தான் நகரான ஹெராத் நகரில் உள்ள ஒரு பள்ளிவாயிலில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயர்மட்ட தலிபான் சார்பு மதகுரு ஒருவர் உட்பட பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பொலிஸார். தெரிவித்தனர்.

முஜிப் ரஹ்மான் அன்சாரி, அவரது காவலர்கள் சிலர் மற்றும் பொதுமக்கள் பள்ளிவாயிலை நோக்கிச் செல்லும் போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குண்டுவெடிப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

சமீபத்திய மாதங்களில் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.