வீட்டில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த மோதிரம் திருடப்பட்டுள்ளதாக தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மகன் நஞ்சருந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று திருகோணமலை- மஹதிவுல்வௌ பகுதியிலும் பதிவாகியுள்ளது.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த மோதிரத்தை காணவில்லை. மோதிரம் திருடப்பட்டமை சம்பந்தமாக மகனிடம் வினவியதாகவும், தான் எடுக்கவில்லை என கூறியதையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று  முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மகன் நஞ்சருந்தியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு நஞ்சருந்தியவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் எனவும் இராணுவத்தில் இருந்து இடைவிலகிய நிலையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த 50,000 ரூபாய் பெறுமதியான மோதிரத்தை திருடியமையால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இருந்த போதிலும் குறித்த இளைஞர் நஞ்சருந்தி மயக்கமற்ற நிலையில் பக்கத்து வீட்டார்களின் உதவியுடன் மஹதிவுல்வௌ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும் வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

ஆனாலும் போதைப்பொருட்கள் அதிகரித்து வருகின்றமையினால் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் மற்றும் தற்கொலை சம்பவங்கள் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.