எரிவாயு விலை நாளை முதல் குறைக்கப்படும் நிலையில், உணவுப் பொதியின் விலையினை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், நகர் புறங்களில் பொருட்களின் விலை குறைவாக காணப்படுகின்ற போதும், அதன் பயன் கிராமப்புற மக்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொத்து ரொட்டியின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.