தமக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறு கோரி பல்வேறு தொழில்சார் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கங்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க்கு முன்பாக இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை குறித்த பகுதியில் இருந்து வெளியேறப் போவதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழில்சார் முச்சக்கரவண்டி சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

QR குறியீட்டு முறைமையின் கீழ் முச்சக்கர வண்டிகளுக்கு வாராந்தம் 5 லீற்றர் பெற்றோல் வழங்கப்படுகிறது.

குறித்த எரிபொருள் தொகையானது தமக்கு போதாது என தொழில்சார் முச்சக்கரவண்டி சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இருப்பினும், எரிபொருள் ஒதுக்கீட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கு வலுசக்தி அமைச்சு எந்தவொரு நடவடிக்கையினையும் முன்னெடுக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதேவேளை, நாட்டில் சில பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

அத்துடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு  முன்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.