ஆரோக்கியமான அறிவு, பாலியல் ரீதியான சட்ட முறைமை தொடர்பில் செயலமர்வு

zahir
By -
0


(ஹஸ்பர்)

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 10இல்; கல்வி பயிலும் மாணவர்களுக்கான ஆரோக்கியமான அறிவு மற்றும் பாலியல் ரீதியான சட்ட திட்டங்களை எவ்வாறு முறையாக தெரிந்திருப்பது பற்றிய செயலமர்வொன்று இன்று (01) பாடசாலை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வினை கிண்ணியா பிரதேச செயலக உளவளத் துணை பிரிவு, போதை தடுப்பு பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தன. இதில் வளவாளராக கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவின் வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி கலந்து கொண்டார்.

பாடசாலைப் பருவத்தில் மாணவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதில் பாலியல் ரீதியான முறையற்ற தகாத உறவு, காதல், பயம் போன்ற உளச் சுகாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் உள்ளது. இதில் இருந்து விழிப்புணர்வு பெறுவதற்கான ஓர் ஆரம்ப கட்ட விழிப்புணர்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது. 

16 வயதுக்கு உட்பட்டவர்கள் தகாத பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டால், 10 வருட சிறைத் தண்டனை உண்டு என்பதனை சட்டம் சொல்கிறது போன்ற பல விடயங்களை டாக்டர் நஸ்மி இதன் போது தெளிவூட்டினார்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)