அரசாங்கத்திலிருந்து வெளியேறிய சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் அமைத்துள்ள புதிய கூட்டணியை வெளியிடும் நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு “உத்தர லங்கா கூட்டமைப்பு” என்று பெயரிட்டுள்ளனர்.

கூட்டணியில் இணையும் கட்சிகளின் தலைவர்கள் அந்த கூட்டணியின் கொள்கை அறிக்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் கையெழுத்திட்ட பின்னர், கூட்டணியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டன.

கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ஸ செயற்பட உள்ளதாகவும் இதன் போது அறிவிக்கப்பட்டன.

இந்த கூட்டணியின் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி என்பன அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.