2022 செப்டம்பர்06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர்06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

பலத்த மழைவீழ்ச்சி நிலைமை இன்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்தியமாகாணங்களில் பல தடவைகள்மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லதுஇரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளில்அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்றுவீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (06ஆம் திகதி) பெந்தோட்டை (களுத்துறை மாவட்டம்), பொத்துபிட்டிய (இரத்தினபுரி மாவட்டம்), மற்றும் போதாகம (மொனராகலை மாவட்டம்) ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.