அமைச்சரவைக்கு மேலும் 12 பேர் நியமிக்கப்படுவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கள முன்னணி செய்தித்தாள்கள் இதனை தெரிவித்துள்ளன.

இதன்படி, நாமல் ராஜபக்ச, ரோஹித்த அபே குணவர்த்தன, ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எல்.எம் அத்தாவுல்லா உட்பட்டவர்களின் பெயர்கள் இதுவரை பெயரிடப்பட்டுள்ளதாக இந்த செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த வாரம் 37 பேர் ராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.

சர்வகட்சி அரசாங்க யோசனை தோல்வியடைந்துள்ள நிலையிலேயே பொதுஜன பெரமுன கட்சியை முன்னிலைப்படுத்தி இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.