மாணவர்களின் உணவுப்போசாக்கு குறித்து ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

  Fayasa Fasil
By -
0


நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய 7,925 பாடசாலைகளில் உணவு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மஹிந்த யாப்பா தெரிவித்துள்ளார்.

ஏனைய பாடசாலைகளுக்கு தனியார் பிரிவினரின் ஒத்துழைப்புடன் போசாக்கு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மாணவர்களால் வீடுகளிலிருந்து கொண்டுவரப்படும் உணவுகளின் போசாக்கு தொடர்பில் கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)