தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதாகவும்,உலகம் முன்னோக்கி நகர்ந்தாலும் எமது நாடு அதே இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,அவர்களுக்கு நாடு செல்லும் திசை பற்றிய புரிதல் இல்லை எனவும், நாடு இவ்வாறானதொரு இக்கட்டான நிலையிலுள்ள போதும் அமைச்சரவை, நிதியை சுரண்டுவதோடு குறைந்த பட்சம் அரசாங்கத்திற்கு எதற்கும் எந்தத் வேலைத்திட்டமும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (29) தெரிவித்தார்.

இவ்வாறான நிலையிலும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதாக தெரிவித்த அவர், அதற்கு “பிரபஞ்சம்” மற்றும் “மூச்சு” திட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.

வெல்லவாய, தனமல்வில தேர்தல் தொகுதிக்  கூட்டத்தில் இன்று(29) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் வெல்லவாய தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளர் ஆனந்த குமாரசிறி அவர்களால் இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் பிற்பாடு மொனராகலை,தனமல்வில, போதாகம மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற வன்னம் ஜோன் டார்பர்ட் தடகள விழாவில் 18 வயதுக்குட்பட்ட உயரம் பாய்தல் போட்டியில் 2.06 மீற்றர் உயரம் பாய்ந்து முதலாம் இடத்தைப் பெற்று சிறப்பாக திறமையை வெளிப்படுத்திய வீரர் தெனெத் அனுஹாஸுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்து கொண்டார்.

இதேவேளை,தனமல்வில தேசியப் பாடசாலைக்கு கண்காணிப்பு விஜயத்திலும் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர், விரைவில் பாடசாலைக்குத் தேவையான பேரூந்து வசதி செய்து தரப்படும் எனவும்  உறுதியளித்தார்.

கோப் குழு,கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்படும் என சபாநாயகர் கூறினாலும்,ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தை பாதுகாப்பதால் தலைவர் பதவி கனவாகவே உள்ளதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்கள் தான் தேசிய பேரவைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும், ரணில் விக்ரமசிங்க கூட காக்கை நிதி அமைச்சரின் உத்தரவின் கீழே செயல்படுகிறார் எனவும், கோட்டாபய ராஜபக்சவின் நிழல் அரசாங்கமே இன்னும் நாட்டை ஆட்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் வரிப்பணத்தின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தியதாகவும், சுதந்திரத்திற்குப் பின் உருவாகிய ஒவ்வொரு எதிர்க்கட்சியும் மக்களுக்குச் சேவை செய்வதை விடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற திட்டமிட்டுச் செயல்படுவதால் தான் அவர்களும் ஒன்று, இவர்களும் ஒன்று என்ற கருத்தோட்டம் உருவாகியதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அப்படி இருந்தும் ஐக்கிய மக்கள் சக்தி மாற்றுப் பாதையில் பயணித்துக்கொண்டு எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்காக முன் நிற்பதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறே,அவர்களும் ஒன்று, இவர்களும் ஒன்று என கூறுபவர்களே அன்று சுனாமி திருடன் என்று முத்திரை குத்தப்பட்ட மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்க 

வீடு வீடாகச் சென்றனர் எனவும்,அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த காலப்பகுதியில் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை எனவும், அதற்கிணங்க,அவர்களும் ஒன்று இவர்களும் ஒன்று என்று கூறுபவர்களும் அதே பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் என்றாலும், ஐக்கிய மக்கள் சக்தி இவற்றிலிருந்து வேறுபட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2020 இல்,புதிய கட்சியாக உருவாகி கோவிட் காலத்திலும் மூச்சுத் திட்டத்தின் மூலம் 52 மருத்துவமனைகளுக்கு 1500 இலட்சத்திற்கும் அதிகமான பெருமதியுடைய உபகரணங்களை வழங்கியதாகவும்,இந்த வேலைத்திட்டத்தின் வெற்றியைக் கண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உதவியைப் பெற்றுக்கொண்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.