(ஹஸ்பர்)

திருகோணமலை மாவட்டம், கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட திஃகிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் 2021(2022) ஆம் ஆண்டிண் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கான பரிசளிப்பும் கௌரவிப்பு நிகழ்வும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் திருமதி நாதிரா ஷகீட் அமீன் பாரி தலைமையில் நேற்று (05) இடம்பெற்ற குறித்த கௌரவிப்பு நிகழ்வில் 62 மாணவிகள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

1902ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியானது அன்று தொடக்கம் இன்று வரை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளை பல்கலைக்கழகங்களுக்கும் 50 க்கு மேற்பட்ட மாணவிகளை மேலும் கல்வியற் கல்லூரிகளுக்கும் அனுப்பி வருகின்றமை விசேட எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

எமது கல்லூரியின் உயர்ந்த பட்ச சாதனையாக 2008ம் ஆண்டில் கலைத் துறையில் தேசிய ரீதியில் முதலாமிடத்தை ஒரு மாணவி பெற்றுக் கொண்டார்.

இம் முறை மருத்துவத் துறைக்கு 5 மாணவிகள் தெரிவாகியமை மேலும் கல்லூரிக்கு வலுச் சேர்க்கிறது. 2350 மாணவிகளையும் 123 ஆசிரியர்களையும் 21 கல்வி சாரா ஊழியர்களையும் கொண்ட இக் கல்லூரி எதிர்காலத்திலும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கிறேன் என கல்லூரியின் முதல்வர் திருமதி நாதிரா ஷகீட் அமீன்பாரி தெரிவித்தார்.

இதில் பிரதம அதிதியாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் ஏ.நசூகர்கான், பிரதி கல்விப் பணிப்பாளர் ஏ.சி.எம்.நஸார் உட்பட ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.