இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர்  மதிப்பிற்குரிய ஸுஹைர் முஹமத் ஹம்துல்லா ஸயித் அவர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பில் இலங்கை, பாலஸ்தீன இளைஞர்களுக்கு பொதுவாக கிடைக்கும்  வாய்ப்புகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

பாலஸ்தீன தூதுவர் கூறுகையில், பாலஸ்தீன மக்கள் கல்வித்துறையில் சிறந்து விளங்குகின்றனர், அவர்களில் 98% ஆனவர்கள் படித்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், தற்போது வரை அடக்குமுறையை மட்டுமே எதிர்கொண்டு வருகின்றனர், இவ்வகையான தகவல்களை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பிற நாட்டு இளைஞர்கள் என்ற வகையில், பலஸ்தீனத்தில் இதுவரை இடம் பெற்ற அடக்குமுறைகளுக்கு இரங்கலைத் தெரிவிப்பதோடு, மேலும் எதிர்கால பலஸ்தீன இளைஞர்களுடைய வாழ்க்கை சிறந்த முறையில் அமைய வாழ்த்துகிறோம்.

*Ahmath Sadique*
Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament🇱🇰

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.