பிரிட்டனின் இரண்டாம் எலிஸபெத் மகாராணி தனது 96 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை (08) காலமானார்.

ஸ்கொட்லாந்திலுள்ள பல்மோரல் மாளிகையில் அவர் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

முன்னதாக, அரசிஇரண்டாம் எலிஸபெத்தின் உடல்நிலை குறித்து அவரின் மருத்துவர்கள் நேற்று காலை கவலை தெரிவித்திருந்தனர்.

அரசி இரண்டாம் எலிஸபெத் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளனர் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அவர் காலமாகிவிட்டார் என பக்கிங்ஹாம் அரண்மனை சற்றுமுன் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.