நாடாளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின்   தலைமையகம் பத்தரமுல்லை பகுதியில் அமைந்துள்ளது.

சிறந்த சமூகத்தை உருவாக்கும் கட்சியை ஸ்தாபிப்பதே தமது  நோக்கம் என நாடாளுமன்ற உறுப்பினர்  குமார வெல்கம  தெரிவித்துள்ளார்.

அத்துடன் 40 அல்லது 50 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்சிக்குள் உள்வாங்கப்படுவதுடன்,  சிறந்த அரசியல்  தலைவர்களை உருவாக்குவதே தமது எதிர்ப்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.