உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு  வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினம் (23) 07 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 டொலரில் இருந்து 78 டொலராகக் குறைவடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின்னர் எண்ணெயின் குறைந்த விலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றில் அதிக வட்டி வீதம் மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.