இலங்கைக்கு மேலும் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மே 20ஆம் திகதியன்று 3 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு மனிதாபிமான உதவியாக வழங்கியிருந்தது

இந்தநிலையில், நேற்று வழங்கப்பட்ட 3.5 மில்லியன் டொலர்களையும் சேர்த்து 6.5 மில்லியன் டொலர்களை ஜப்பான், இலங்கைக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடிக்காக வழங்கியுள்ளது.

இந்த உதவிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம்,ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஆகியவற்றின் ஊடாக வழங்கப்படுகின்றன.

இதேவேளை ஜப்பானுடன் நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை கொண்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை போக்குவதற்கு இந்த உதவி பங்களிக்கும் என ஜப்பான் அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.