முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்ப உள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஜீன் 9ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை சுற்றிவளைத்திருந்தனர்.

இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறி மாலைத்தீவு வழியாக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் தனது பதவி விலகல் கடிதத்தையும் சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அத்துடன், கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை மீளவும் நாடு திரும்பவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.