அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இலங்கையின் வெளி கடன் கொடுநர்களுக்கு, அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான, கிளிஃபோர்ட் சான்ஸ் (Clifford Chance) தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தெளிவூட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மெய்நிகர் வழியாக நடைபெற உள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் கடனைப் பெற்றுள்ள இலங்கை, இறையாண்மை பத்திரங்களிலும் கடன்களை பெற்றுள்ளது.

அந்த வகையில் சுமார் 50 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.