சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளருமான மஹிந்த ஜயசிங்க தலைமையில் கம்பஹா மாவட்டம், ஓகொடபொல பிரதேசத்தில் நேற்று (16) நடைபெற்றது. 

பிரதேசத்தை சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் அரசியல் செயற்பாட்டாளர் இஹ்ஸான் நிஸாரின் வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் முனீர் முளப்பர், கட்சியின் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் இன்சாப், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கம்பஹா மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகள் மற்றும் வட்டாரங்களுக்கான நிறைவேற்றுக்குழுக்களை அமைத்து வருவதுடன், கஹட்டோவிட்ட வட்டாரத்திற்கான (කොට්ටාස) நிறைவேற்றுக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.