(ஹஸ்பர்)

திருகோணமலை, தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பாலம் போட்டாறு கிராமத்தில் போதை தடுப்பு, பால் நிலை சமத்துவம் தொடர்பில் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு இளைஞர் அகம் நிறுவனத்தின் அனுசரணையின் கீழ் இடம்பெற்றது.


தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி; வழிகாட்டுதளுக்கிணங்க இன்று (05) பத்தினிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம்பெற்ற குறித்த பயிற்சி பட்டறையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபடவும் அதன் ஊடான பாதக விளைவுகள் தொடர்பிலும் தெளிவூட்டப்பட்டதுடன் பால் நிலை சமத்துவம் குடும்ப வன்முறை தொடர்பிலும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டன.


குறித்த கிராம சேவகர் பிரிவில் இவ்வாறான சமூகம் சார் பிரச்சினைகளில் இருந்து மீளவும் கிராமத்தை போதை ஒழிப்பு வன்முறையற்ற குடும்பம் என்ற நோக்கில் நிலையானதாக அமைய இளைஞர், மகளிர் சங்கங்களும் இதன் போது உருவாக்கப்பட்டன. 


இதில் அகம் நிறுவன இணைப்பாளர் பொ.சச்சிவானந்தம், இளைஞர் சேவை அதிகாரி ஐ.ஜாபிர், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி, பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் எம்.ஏ.நஸ்ரின் டிலானி, சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன், பொலிஸ் அதிகாரி, இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.