- ஸல்மான் பின் பாரிஸ் -  

(ஈர் நூல் வெளியீடு)

தன் ஐந்தாவது தசாப்தமில்
கால் பதித்து
நிலைத்தோங்கி நிற்கும்
நம் கலாச்சாலை
ஈன்றெடுத்த ஆளுமை - நீர்

அஷ்ஷெய்க் அகார் சேரே  !

தன் கல்விவாழ்வை 
அடிக்கல்லாய் ஆக்கி
சன்மார்க்க அறிவை
வளமென மாற்றி
சத்திய இஸ்லாத்தின்
பெரும் சொத்தென ஆனீரே !

நீர் பெற்ற ஞானம் கொண்டு
இறைவழி தஃவா பணியுணர்ந்து
உம் சிந்தையில் தோன்றிற்ற சிந்தனைகளையும்,
பக்குவமாய் கடந்து வந்த அனுபவங்களையும்,
இறைவழி குர்ஆனும்,நபி மொழி சுன்னாவினையும்,
சீராய் தொகுத்து சிந்தையில் விதைத்து

சுவாசப்பை தாண்டி துள்ளிவரும் மொழியுடன்,
உமக்கான பாணியில் எடுத்துரைத்து
தஃவா களத்தினில் கால் தடம் பதித்து
தனை செதுக்கிய மண்ணிற்கு
ஆசானாய்  நகராநாதிட்ட உம் சேவை
உமை செதுக்கிட்ட கலாபீடமே பெருமைகொள்ளும் முதல்வரென ஆனீரே !

அஷ்ஷெய்க் அகார் சேரே !

பேச்சைத் தாண்டிய
உம் தஃவா பயணமது
பல ஊடகங்களூடாக சிறப்புடன் நகர 
சமூக நலனதையுணர்ந்து,
தஃவாவதை
எழுத்திலும் தொடர 
பனுவல்கள் பலவூடு
உம் தஃவா பணியினை 
தொடர்ந்திட்ட முன்மாதிரி நீரே !

மிம்பர் மேடை தாண்டிய,
உம் எழுத்துப்பயணம்
ஈன்ரெடுத்த *இரு நூல்களையும்
 
காணாத கண்ணும் கண்ணல்ல !
என்பேன்.

இன்னும்,
உம் தொனி கேட்கா செவிகள் செவியல்ல என்பேன்.
உம் சிந்தனைகள் சென்றரையாத இடமேயில்லையென்பேன்.
 
உம்
அஹ்லாகினையுணரும் மாணவன் நான் ! 

இறையருளால் இனிதே நடைபெற்று முடிவுற்ற,
 உம் நூல் அறிமுக நிகழ்வினிலே - உம்
எண்ணகளுக்கு வண்ணமிட்ட  இருநூலின்   அறிமுகங்கள் காதோரம் ஒலிக்கிறதே.

உம் கலாபீடமிதைக்கண்டு ஆனந்தம் கொள்கிறதே.

என் கல்பதுவும்
வான்பக்கம் உயர்கிறதே !

" உம் ஆயுள் பரக்கத் கண்டிடவும்
தேகாரோக்கியம் நீண்டு பெருகிடவும்
உம் பணிகள் என்றும் தொடர்ந்திடவும்
தஃவா பணியது சிறந்திடவும்
இறையுதவி தொடர்ந்து கிடைத்திடவும் "

பிராத்திக்குமிவன்,
மாணவன்
- ஸல்மான்பின்பாறிஸ்②⓪⓪①© -

சமாதானத்துக்கும் உரையாடலுக்குமான
ஸலாம் நிலைய அறிமுகமும் ; அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்வும் ஜாமிஆ நளீமியா மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாய் நடைப்பெற்று முடிவடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ் ❤

* நூல்கள்

●"சமாதானத்தை நோக்கி"
●"இஸ்லாமிய கண்ணோட்டத்தில் சிறுபான்மை சமூகமும் நற்பிரஜைத்துவமும்"

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.