49 வயதான பிரபல பாடகர் பாம்பா பாக்யா, திடீர் சுயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான இராவணன் திரைப்படத்தில், பாம்பா பாக்யா தமிழில் பாடகராக அறிமுகமானார்.

இதனை, தொடர்ந்து, ரஹ்மானின் இசையில், 2.ழு திரைப்படத்தில் புள்ளினங்காள், சர்கார் படத்தில் சிம்ட்டாங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, பொன்னியின் செல்வன்-1 படத்தில் பொன்னி நதி போன்ற பல  பாடல்களை பாடி குறுகிய காலத்தில் பிரபலமானார்.

அண்மையில் வெளியான, பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'பொன்நதி...' பாடலை ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து அவர் பாடியிருந்தார்.

இந்தப் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதேவேளை, அண்மையில் சூரியன் எவ்.எம் வானொலியின் 24 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி பம்பா பாக்யா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.