ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எதிர்வரும் தேர்தல்களில் ஒரு கூட்டமைப்பாக போட்டியிடும் நோக்கத்தில் கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து சிவில் அமைப்புக்களையும் மாற்றத்திற்கான ஒன்றிணைவு என்ற கூட்டமைப்பை உருவாக்கியது.

மேலும் நேற்றைய தினம் (24) கம்பஹா மாவட்ட கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு சார்பாக அதன் தலைமைத்துவ சபை உறுப்பினரும் ஶ்ரீ லங்கா சோனகர் முன்னணியின் ஸ்தாபக தலைவருமான மௌலவி ஏ.எல்.எம்.ஸாபிருக்கும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சார்பில் "லக்பவுர" அமைப்பின் தலைவர் சட்டத்தரணி உபாலி ரத்நாயக்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 

மேலும், இந்நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் அதன் மாவட்ட செயலாளரும், சமாதான நீதவானுமாகிய மொஹமட் இஷாம் மற்றும் ஏனைய சிவில் சமூக உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.