நிதியமைச்சின் சுற்று நிருபம் அரசாங்கத் துறைக்கு
அடுத்தாண்டு புதிதாக ஆட்சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
நாட்டின் நிதி நிலையைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் இந்தீர்மானத்தை எடுத்துள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மகிந்த சிறிவர்தன இது தொடர்பான சுற்று நிருபத்தை வெளியிட்டு சகல அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதேநேரம் அரச அலுவலகங்களுக்கும் புதிய உபகரணங்கள் கொள்வது செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
அரச நிதியிலிருந்து வெளிநாடுகளுக்கு அரச ஊழியர்களை பயிற்சிகளுக்கு அனுப்புவதனைத் தவிர்க்குமாறும் நிதியமைச்சு சகல அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு அறிவித்துள்ளது.
இவ்வாண்டு நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பாக நிதியமைச்சு அறிவித்துள்ள ஆறு பக்க சுற்று நிருபத்தில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-2025 வரை புதிய செயற்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதும் கடினமாக இருக்கும் என அச்சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதியின்றி நலன்புரி நடவடிக்கைகளின் பிரதி லாபங்களைப் பெறுவோரது எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது என்றும் நிதியமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.