ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்றின் முதற் போட்டியில் நேற்;று இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை 04 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. பெறுவதற்கு கடினமான ஓட்ட எண்ணிக்கையினை துரத்தியடித்து இலங்கை அணி வெற்றியினை பெற்றுக் கொண்டது. இந்த வெற்றி மீதமுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் விளையாட பெரும் உந்து சக்தியாக அமையவுள்ளது.

இதே தென்போடு விளையாடினால்; இலங்கை அணி இறுதிப் போட்டிக்ச் செல்லலாம். இன்னுமொரு வெற்றி இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே நிதானம் கலந்த அதிரடியை நிகழ்த்தியது. ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திக் கொடுத்தார். ஆரம்பத்தில் மெதுவாக துடுப்பாடிய இப்ராஹிம் சர்டான் பின்னர் அதிரடியாக அடித்தாடினர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அச்சுறுத்துமளவுக்கு பந்து வீசவில்லை. இறுதி நேரத்தில் விக்கெட்களை கைப்பற்றியமையினால் ஓட்ட எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தது. அதன் காரணமாகவே வெற்றியினையும் பெற முடிந்தது. ஆனாலும் பந்துவீச்சில் இலங்கை அணி மேலும் கவனம் செலுத்த வேண்டும்.

175 ஓட்டங்கள் என்ற இலக்குடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணியின் எதிர்பார்த்த சிறந்த ஆரம்பம் வழங்கப்பட்டது. அதன் காரணமாகவே இந்த பெரிய இலக்கினை துரத்த முடிந்தது. குஷல் மென்டிஸ் மற்றும் பத்தும் நிசங்க வழங்கிய இணைப்பாட்டம் பின்னர் முறியடிக்கப்பட்ட நிலையில், சீரான இடைவெளிகளில் விக்;கெட்கள் வீழத்தப்பட இலங்கை அணி மீது அழுத்தங்கள் ஏற்பட்டன.

தனுஷ்க குணதிலக சரியாக கடந்த போட்டிகளில் பிரகாசிக்காத நிலையில் இன்றைய போட்டியில் சிறப்பாக துடுப்பாடி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். கடந்த போட்டியில் பிரகாசிக்க தவறிய பானுக்க ராஜபக்ஷ மைதானத்துக்குள் வந்தது முதல் ஓட்டங்களை வேகமாக அதிகரித்தனர். நிதானமான அதிரடியை வெளிப்படுத்திய அவர் இலங்கை அணி மீது ஏற்பட்ட அழுத்தத்தை இறக்கி, வெற்றிக்கு கைகொடுத்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.