பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்குமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்தநிலையில் அன்றைய தினம் வரை அனைத்து பொதுக் கட்டடங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் நேற்று(08) காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத் 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார். 

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, ​​1952ஆம் ஆண்டு இவர் பிரித்தானிய மகாராணியான மகுடம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து வேல்ஸ் முன்னாள் இளவரசர் சார்ள்ஸ் பிரித்தானிய மன்னராக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.