ஆசிய கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 213 என்ற வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி தனது முதலாவது ரி20 சதத்தை பதிவு செய்தார்.

அவர் ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

கே.எல் ராஹுல் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் பரீட் அஹமட் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.