அத்தியாவசியப் பொருட்களின் எடையை குறைத்து மக்களை ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

பிஸ்கட், சவர்க்காரம் பற்பசை, மிளகாய்த் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களின் எடையை குறைத்து உற்பத்தி செய்து அதை குறைந்து விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

இதன்மூலம் விலை குறைவாக இருப்பதாக நினைத்து கொள்வனவு செய்வோர் பணத்தை இழக்கிறார்கள் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

சில உற்பத்தியாளர்கள் இந்த பொருட்களை சலுகை என்று விளம்பரம் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்வதாகவும், ஆனால் சாதாரண விலையுடன் ஒப்பிடுகையில், அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.