இன்று (10) கம்பஹா ஸ்ரீ போதி மைதானத்தில் நடைபெற்ற FFSL தங்க கிண்ணத்துக்கான கால்பந்து சுற்றுப் போட்டியின் இரண்டாவது லீக்    ஆட்டத்தையும் வெற்றிகொண்ட கஹட்டோவிட்ட FC (KFC) அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

Dynamic அணியை எதிர்கொண்ட KFC அணிக்கு அப்துர் ரஹ்மான், முஜீப், ஹாமித் மற்றும் டில்சாத் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றுக் கொடுக்க முதல் பாதியை 4-1 என்ற கோல் கணக்கில்  முன்னிலை பெற்று நிறைவு செய்தது.

 தொடர்ந்து இரண்டாம் பாதியில் இரு அணிகளும் மும்முரமாக கோல் போட முயற்சி செய்தும் இறுதி நேரத்தில் Dynamic ஒரு கோல் போட, போட்டி 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் நிறைவுற KFC அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

 கடந்த வாரம் KFC அணி திஹாரிய யூத் அணியை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - Kahatowita Sports Information 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.