Qatar Airways இல் நிலவும் பல்வேறு வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (15) நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் நாடளாவிய ரீதியில் இருந்து 5000 இற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 9.00 மணி முதல் மாலை 4.45 வரை நேர்முகப்பரீட்சை இடம்பெற்றுள்ளது. எனினும் 5 - 7 மணித்தியாலங்கள் அளவில் பெருந்திரளானோர் வரிசையில் காத்திருந்த நிலையில் நேர்முகப்பரீட்சை நிறைவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதாக கூறி அவர்களது CVகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நாளைய தினமும் (16) நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.