எதிர்வரும் நவம்பர் 23 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறவுள்ள ‘அபுதாபி T10 லீக் 2022’ கிரிக்கெட் தொடரில் விளையாட ஏழு இலங்கை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆறாவது சீசனுக்கான வீரர்கள் தெரிவு கடந்த திங்கட்கிழமை (26) நடத்தப்பட்டது.

இரண்டு இலங்கையர்களான துஷ்மந்த சமீர மற்றும் சாமிக்க கருணாரத்ன ஆகியோர் முறையே நோதர்ன் வொரியர்ஸ் (Northern Warriors) மற்றும் மொரிஸ்வில்லே சேம்ப் ஆர்மி (Morrisville SAMP Army) அணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் தெரிவுக்கு முன்னதாக வீரர்களை தக்கவைத்து ஒப்பந்தம் செய்ய உரிமையாளர்கள் அனுமதிக்கப்பட்டதால், வனிந்து ஹசரங்க, தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன ஆகிய ஐந்து இலங்கையர்கள் ஏற்கனவே நேரடி கையகப்படுத்தல் செயல்முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மொத்தத்தில், ஏழு இலங்கையர்கள் ஆறாவது சீசனில் இடம்பெறவுள்ளனர்.

இம்முறை ‘அபுதாபி T10 லீக் 2022’ தொடரில் அமெரிக்காவில் இருந்து இரண்டு புதிய உரிமையுடைய அணிகள் இணையவுள்ளன.

நியூ யோர்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் மோரிஸ்வில்லே சேம்ப் ஆர்மி ஆகிய இரு அணிகளுடன், மொத்தமாக எட்டு அணிகள் 10 ஓவர்களை கொண்ட தொடரில் மோதவுள்ளன.

முதல் சுற்றில் எட்டு அணிகளும் தங்களுக்குள் ஒரு முறை மோதும். அதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.