(எம்.பஹ்த் ஜுனைட்)

2022 ம் வருட  மட்டக்களப்பு மாவட்ட மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் சுவற்று(Track) நிகழ்வுகளில் ஆண்கள் பிரிவில் இரண்டு தங்கப்பதக்கம் வென்று சிறந்த வீரராக ஏ.எல்.அஹ்மத் அரீஜ்  தெரிவானார்.

விளையாட்டுத்துறை அமைச்சினால் நடாத்தப்படும் 47-வது தேசிய விளையாட்டு விழாவின்  மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மெய்வல்லுனர் போட்டிகளும் விருது வழங்கும் நிகழ்வும் கடந்த  சனி(03) மற்றும் ஞாயிறு (04) தினங்களில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

 இப்போட்டிகளில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ஏ. எல். அஹமத் அரீஜ் 100 மீட்டர் போட்டியில் 11.72 செக்கண்ட்களில் ஓடி தங்கப் பதக்கத்தினையும் மற்றும் 200 மீட்டர் போட்டியில் 23.19  செக்கன்களில் ஓடி மற்றுமொரு தங்க பதக்கத்தினையும் வென்றார்.

மேலும் ஆடவர் பிரிவில் 200 மீட்டரினை 23.19 செக்கண்ட் களில் ஓடி முடித்ததன் மூலம் இவ்வாண்டுக்கான சுவட்டு மெய்வல்லுனர் நிகழ்வுகளில் "சிறந்த வீரராக  (Best Athlete) " தெரிவு செய்யப்பட்டதுடன் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே. கருணாகரன் அவர்களினால்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் .

தனது விளையாட்டு திறமை ஊடாக காத்தான்குடிக்கு பெருமை பெற்றுக்கொடுத்த வீரர் ஏ.எல்.அஹ்மத் அரீஜ் எரிவரும் 17,18 தினங்களில் இடம்பெறவுள்ள மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.அஹ்மட் அரீஜ் இ காத்தாங்குடி அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்கும் மாணவரும் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் எம்.வை.ஆதம்லெப்பை அவர்களின் புதல்வருமாவார்.

விளையாட்டு துறையில் மேலும் பல சாதனைகள் புரிய எமது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.