அகில இலங்கை YMMA பேரவையின் புதிய தேசிய தலைவர் இஹ்சான் ஏ ஹமீட் கடமையேற்பு

Rihmy Hakeem
By -
0

அகில இலங்கை YMMA பேரவையின் புதிய தேசிய தலைவர் இஹ்சான் ஏ ஹமீட் இன்று தனது கடமையினை உத்தியோகபூர்வமாக  அகில இலங்கை YMMA பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் பாரமெடுத்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர் தேசப்பந்து சமூக நேயன் அல் - ஹாஜ் சஹிட் எம் ரிஸ்மி  அவர்கள் புதிய தேசிய தலைவரிடம் பொறுப்புளை ஒப்படைத்தார்.

இதன்போது அகில இலங்கை YMMA பேரவையின் புதிய தேசிய செயலாளர் மற்றும் தேசிய பொருளாளர் ஆகியோர்களும் தங்களது தங்களது கடமைகளைப் பாரமெடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் அகில இலங்கை YMMA பேரவையின் முன்னாள் தேசிய தலைவர்கள் அகில இலங்கை YMMA பேரவையின் உப தலைவர் முன்னாள் மாவட்டப் பணிப்பாளர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)