வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலத்தின் தரம் 04 மாணவ மாணவியரால் வாசிப்பு வாரத்தை நோக்காகக் கொண்டு (27) வியாழக்கிழமை  கண்காட்சி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

   இக் கண்காட்சியில் வாசிப்பு  சம்பந்தமான ஆக்கங்கள் பலதும் மாணவர்களின் கைகளால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இதற்காக  தரம் 04 மாணவ மாணவியரின் வகுப்பாசிரியைகளான திருமதி ரிஹானா , திருமதி ஸன்பானியா , திருமதி பஹீமா ஜஹான் ஆகியோர் மாணவர்களுக்கு அழகான வழிகாட்டலையும் திட்டமிடல்களையும் வழிப்படுத்தி இருந்தனர். 
இந் நிகழ்வுக்கு  பாடசாலை அதிபர் திருமதி  ஸலீஹா , ஆசிரிய ஆலோசகர்களான  ஸயான் , ரிஸ்மி  , ஆசிரியர்களான  நுஸ்ரத்  , மொஹிடீன், ரம்ஸான் , ரம்ஸி அலி  , நஸ்ரின்  , பாரூக்  ,  மாஹிர் ஆகியோர் மற்றும் ஏனைய ஆசிரிய ஆசிரியைகளும்  கலந்து சிறப்பித்தனர். 

நிகழ்வின் இறுதிக்கட்டமாக  மல்வானை அல் முபாரக் பாடசாலையின் ஆசிரியர் அஷ்ஷெய்க் பிஸ்தாமி நளீமி அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு  வாசிப்பு தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வொன்றை மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் மிகவும் சுவாரஷ்யமாக நடாத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

படம் மற்றும் தொகுப்பு 
பயாஸா பாஸில் 
கஹட்டோவிட்ட



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.