சாஜஹான் செய்தி

இந்தோனேஷியாவில் நேற்று இடம்பெற்ற மோதலில் இதுவரை 174 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
இந்தோனேஷியா மலா மாகாணத்தில் கஞ்சருவான் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உதைப்பந்தாட்ட ஆட்டமொன்றில் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் தாக்கப்பட்டும், நெருங்கியும், மிதிபட்டும் இவ்வாறு பெருந்தொகையானோர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
சர்வதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜியானி இன்பிலின்டோவும் கருத்து வெளியிடுகையில், உதைப்பந்தாட்ட வரலாற்றில் இருண்ட நாள் இதுவென வர்ணித்துள்ளார். 
இவ்வனர்த்தம் தொடர்பாக கேள்விப்பட்டதும் தான் அதிர்ச்சியடைந்ததாகவும், இது குறித்து அந்நாட்டு உதைப்பந்தாட்ட சம்மேளனத்திடம் உடனடி விளக்கம் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் பிரயோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ரஷ்யர்கள் அங்குமிங்கும் சிதறியோடியதால் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட்டதாக அச்சம்பவத்தை நேரில் கண்ட உதைப்பந்தாட்ட ரசிகர் ஒருவர் பி.பி.சி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.