(சிவா ராமசாமி)

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் நேற்றுக்காலை வரை நிறைவேறுமா இல்லையா என்றுதான் நிலைமை இருந்தது.

அவர்கள் இவர்களிடம் பொறுப்பைக் கொடுக்காமல் ரணிலே நேரடியாக களத்தில் இறங்கினார்..

ரணில் செய்த முதல் அதிரடி - பெசிலின் வலது கை.. பெசிலால் நியமிக்கப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிறிபால அமரசிங்கவை பதவியிலிருந்து தூக்கினார்..

பதவியிலிருந்து ஏன் தூக்கினார்கள் ? எதற்காக தூக்கினார்கள் என்று அமரசிங்கவிற்கே தெரியாது.. ரணிலை தொடர்புகொள்ள பெசில் தரப்பு எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை..

ரணிலின் 2 ஆவது அதிரடி - வாக்கெடுப்பு நடக்க இரண்டு மணி நேரஙகளுக்கு முன்னர் சமல் , மஹிந்தவை நாடாளுமன்ற ஜனாதிபதி அறையில் ஒரு மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசினார் ரணில்..

பேச்சு முடிந்து நாடாளுமன்றில் நடந்த ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தில் பேசிய சமல், 22 ஐ ஆதரிக்க வேண்டுமென கடுந்தொனியில் கூறினார்.. அதனையடுத்து நிலைமைகள் மாறின.. பெசிலின் ஆதரவு எம்.பிக்கள் கூட்டம் முடிந்த கையோடு பார்லிமெண்ட்டிலிருந்து வெளியேறிவிட்டனர்..

ரணிலுக்கு ஆதரவாக நிமல் லான்சா , மஹிந்தானந்த அழுத்கமகே கடும் வேலை..

கட்சிகளை உடைத்து சின்னாபின்னமாக்கி நாடாளுமன்றத்தில் தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட பெசில் , இன்று தனது கட்சிக்கும் அதேநிலை அதுவும் ரணிலால் ஏற்படுவதை பார்ப்பது வரலாற்றுத்துயர்..

இனி அமைச்சரவை நியமனங்களுக்கு , அரச வேலைகளுக்கு பெசிலின் கண்ணசைவு தேவையில்லை.. பிரசன்ன ரணதுங்க , ரொஷான் ரணசிங்க உட்பட்ட பொதுஜன பெரமுனவின் பல முக்கியஸ்தர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் சேரலாம்.. அல்லது ரணில் தலைமையிலான புதிய கூட்டணியில் இணையலாம்.. அதற்கான பேச்சுகள் முடிந்துவிட்டன..

பெசிலால் பொருளாதார நன்மைகள் அடைந்தவர்கள் , அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் மீண்டும் அவரின் வருகை நடக்கும் என்று உருட்டக்கூடும்.. ஆனால் அது சாத்தியமில்லை.. 

அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு கோட்டா போல அங்கேயும் இல்லாமல் இங்கேயும் இல்லாமல் அலைந்து திரிய பெசில் என்ன?

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.