இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு கனுக்கால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன் த சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வருகின்ற இருபதுக்கு இருபது உலகக்கிண்ணப் போட்டித் தொடரைத் தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அதனைத்தொடர்ந்து பூரணமாக குணமடைய சுமார் 6 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் T-10 போட்டிகளில் அவரால் கலந்து கொள்ள முடியாது போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சத்திர சிகிச்சையை தொடர்ந்து சமீரவுக்கு டெஸ்ட், ஒருநா‌ள் போட்டிகளிலும் பூரணமாக விளையாடலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.